BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 28 August 2013

திருமாவளவனுக்கு பயப்படுகிறதா ஊடகங்கள்? கவிதா அளித்த புகார் குறித்து விரிவான செய்திகள் போட மறுக்கும் ஊடகங்கள்.

திருமாவளவனுக்கு பயப்படுகிறதா ஊடகங்கள்? கவிதா அளித்த புகார் குறித்து விரிவான செய்திகள் போட மறுக்கும் ஊடகங்கள்.

ஊடகங்களுக்கு ஒரு நிகழ்வு கிடைத்தால் அதை பெரிய சென்சேஷனல் நியூஸ் ஆக்கி அதில் டி ஆர் பி ரேட்டிங் ஏற்றி விற்காமல் விடமாட்டார்கள்,
மேலும் தினமும் உலகில் ஏதேனும் பரபரப்பான செய்திகள் நடந்து கொண்டிருக்காது என்பதால் என்றாவது ஒரு பரபரப்பான நிகழ்வு கிடைத்தால் அதை மெகாசீரியல் போன்று இழுத்து பெரிய அளவில் ரேட்டிங்கை ஏற்றுவார்கள்.

சாதாரண நாட்களில் இருக்கும் வாசகர்கள், பார்வையாளர்களை விட பரபரப்பான நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் ஊடகங்களின் வாசகரக்ள் பார்வையாளர்கள் எண்ணிக்கை 5 மடங்கிற்கு மேல் அதிகரிக்கும்,

இதனால் தான் நித்யானந்தா விவகாரம் பல எப்பிசோட்கள் போனதும், தர்மபுரி இளவரசன்-திவ்யாவுக்கு அதீத ஊடக வெளிச்சம் அளித்ததும் நடந்தது, ஆனால் சில நேரங்களில் ஊடகங்கள் பேசிவைத்தாற்போல் அடக்கி வாசிப்பார்கள், சேரன் மகள் தாமினி விவகாரத்தில் முதலில் வெளிச்சத்தை கொட்டிய ஊடகங்கள் இயக்குனர் அமீர் வெளிப்படையாக யாரும் இது குறித்து கருத்து சொல்லாதீர்கள் என்று கூறியதும் தமிழ் சினிமாவின் மொத்த இயக்குனர்களும் சேரன் பின்னால் நிற்கும் நிலையில் ஊடகங்கள் சினிமாவை நம்பியிருப்பதால் சினிமாவின் பிரம்மாக்களான இயக்குனர்கள் சொன்னதை மீற முடியாத ஊடகங்கள் பின் வாங்கின.

கடந்த சில நாட்களாக சென்ஷேனல் பிரச்சினைகள் ஏதும் இல்லாத நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளன் மீது கவிதா என்ற பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்ற கடுமையான புகாரை வைத்த போதும் இது ஒரு பெரிய சென்சேஷனல் செய்தியாக இருந்த போதும் இது தொடர்பாக மீடியாக்கள் சில வரி செய்திகளாக மட்டும் கூறிவிட்டு சென்று விட்டன.  புகார் கொடுத்த கவிதாவும் சாதாரண புள்ளி அல்ல, பல கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருடன் நட்பில் இருந்துள்ளார். புகார் உண்மையா? பொய்யா? இந்த புகாரின் உண்மை தன்மை என்ன? பின்ணணி என்ன? என்றெல்லாம் ஊடகங்களை ஆராய விடாமல் தடுப்பது எது?

ஃபேஸ்புக்கில் நடைபெறும் கிஷோர்-மனுஷ்யபுத்திரன் போன்றோர்களின் பிரச்சினைகளுக்கெல்லாம் விவாதங்கள் வைக்கும் தொலைக்காட்சி சேனல்கள் திருமாவளவன் மீதான இந்த கடுமையான புகார் குறித்து பெரும் மெளனம் காக்கின்றனர்.

பத்திரிக்கை மற்றும் டிவி மீடியாக்கள் தங்களை முற்போக்கு சக்திகள் என்று கூறிக்கொள்ள விரும்புவதால் திருமாவளவன் மீதான புகார் குறித்து பேசினால் அது தலித் எதிர்ப்பு என்று புரிந்து கொள்ளப்படும் என்று அஞ்சுகின்றன, இது மட்டுமின்றி ஊடகங்களில் விவாதங்களில் கலந்து கொள்ளும் முற்போக்காளர்கள் பெரும்பாலானோர் தலித் ஆதரவாளர்களாக உள்ள‌தாலும் இவர்கள் அனைவருமே திருமாவளவன் குறித்து விமர்சிக்க தயாராக இல்லாததாலும் திருமாவளவன் மீதான‌புகார் குறித்து விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை.

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் மீதான இந்த புகாருக்கு காரணம் பாமக தான் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் கவிதா தனக்கு ராமதாசை யாரென்றே தெரியாது என்று மறுத்துள்ளார்.  இது குறித்து விமர்சித்த சில பாமக தொண்டர்கள்  டோல்கேட் தகராறுகளுக்கெல்லாம் அன்புமணியை கடுமையாக விமர்சிக்கும் ஊடகங்கள் திருமா மீதான புகாருக்கு மட்டும் அமைதி காப்பது ஏன் என்றும் இது போன்ற புகார் அன்புமணி மீதோ காடுவெட்டி குரு மீதோ வந்திருந்தால் இந்த ஊடகங்கள் எப்படி எல்லாம் விமர்சித்திருக்கும் என்றும் கூறினார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media