கருணாநிதி குடும்பத்தின் பிற வாரசுகளை போன்று இல்லாமல் அரசியலில் அதிகமாக தலையிடாதவர் அவரது மூத்த மகள் செல்வி.மாறன் பிரதர்ஸ்க்கு கருணாநிதி குடும்பத்தில் பாதுகாப்பு அளித்து வருவதே கருணாநிதியின் மூத்த மகள் செல்வி தான்.
இவர் தான் முரசொலிமாறனினி தம்பியான முரசொலி செல்வத்தை திருமணம் செய்துள்ளார், மாறன் பிரதர்ஸ்க்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே வாய்க்கா தகராறு நடந்த போது மாறன் பிரதர்ஸ்சை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்தவர், 2008 ஜூலை மாதத்தில் தற்கொலைக்கு முயற்சித்தார் என்று கூட பரபரப்பு கிளம்பியது.
தற்போது சென்னை நுங்கம்பாக்கம் காசி கார்டன் குமரப்ப முதலில் தெருவில் ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான 20 கிரவுண்ட் நிலத்தில் 16 கிரவுண்ட் நிலம் செல்வியின் மருமகனின் சகோதரி உமா மகேஸ்வரி பெயரில் கடந்த திமுக ஆட்சியில் இருந்த போது வாங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலத்திற்கு ரூ8 கோடிக்கு வாங்கொள்வதாக பேசியெடுக்கப்பட்ட முடிவில் ரூ1 கோடியே 72 லட்சம் அட்வான்ஸ் தந்தனர்,. பின்னர் அட்வான்சில் இருந்து ரூ1 கோடியே 50 லட்சத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர். கடைசியாக 16 கிரவுண்ட் நிலத்துக்கு கொடுக்கப்பட்ட தொகை வெறும் ரூ22 லட்சம்தான். மீதி தொகையான 7கோடியே 78 இலட்சத்தை கேட்டதற்கு மிரட்டினர் என்று அறக்கட்டளை நிர்வாகி யதிஸ் குப்தா போலீசில் புகார் கூறியிருக்கிறார்.
கடந்த திமுக ஆட்சி காலத்திலேயே போலிசில் புகார் அளித்ததற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய நிர்வாகி மீண்டும் போலிசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இந்த விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்தின் பங்கை விசாரித்து வருவதால் செல்விக்கு சிக்கல்கள் எழும் என்று தெரிகிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.