தேன்மொழி மேகநாதன், பவித்ரா கணேசன் மற்றும் சங்கரி கிருஷ்ணன் இவர்கள் மூன்று பேர் விளையாண்ட விளையாட்டை எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாது என ஏழு வருடங்களுக்கு முன் லேடி மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து கொண்டிருந்த மூன்று பெண்கள் பற்றி அப்பொழுது அவர்களுக்கு சிறப்பு கோச்சாக இருந்தவர் தெரிவித்திருந்தார்.
இவர்கள் மூவரும் போலந்தில் நடக்கும் கால்பந்து உலக சாம்பியன் ஆட்டத்துக்கு இந்தியா சார்பில் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர், இவர்கள் மூவரும் சாதாரண குடும்ப பிண்னனியில் இருந்து வந்தவர்கள் என்பதே இதில் முக்கியமான விசயம். மூவரின் பெற்றோர்களும் தினக்கூலிகள் தான்.
பவித்ராவும், தேன்மொழியும் சென்னை சேத்துபட்டை சேர்ந்தவர்கள், லேடி மெட்ரிகுலேசன் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள், பின் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வைஷ்ணவா கல்லூரியில் சேர்ந்து தற்பொழுது பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்கள், எங்களது பள்ளி தோழி சங்கரியும் எங்களுடன் சேர்ந்து உலக கோப்பைக்கு தேர்வு செய்யபட்டிருப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என அவர்கள் தெரிவித்தனர்.
சங்கரியின் தாய் வீட்டுவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருபவர், ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டு ஆண்களுக்கானது, நீ அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்றே சொல்லி வந்திருக்கிறார், பின் தனது மகளின் ஆர்வத்தை பார்த்து மேலும் ஊக்கபடுத்தி இன்று உலக கோப்பையில் விளையாட போலந்து செல்லும் அளவுக்கு பொறுமையாக குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார்.
நல்ல உயரமும், கை பலமும் மிக்க தேன்மொழி இவர்களது அணியின் கோல் கீப்பராக தேர்தெடுக்கபடுவார் என தெரிகிறது, இன்றும் நாங்கள் தெருக்களில் நடந்து செல்லும் பொழுது ஆண்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி கொண்டு தான் இருக்கிறோம், ஆனாலும் எங்கள் லட்சியம் ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் சாதிக்க முடியும் என காட்டுவதே என கூறிய அவர்கள், வெளிநாடு செல்வது இதுவே முதன் முறையாகும்.
மொத்தம் 64 நாடுகளிலிருந்து 500 வீராங்கனைகளுக்கு மேல் வந்து கலந்து கொள்ளும் இந்த ஹோம்லெஸ் உலககோப்பை கால்பந்து விளையாட்டு ஆகஸ்ட் 11 தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைகிறது.
# சென்று வென்று வாருங்கள் இந்தியாவின் எதிர்காலமே!

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.