ரஜினி, கமலை பின் வரிசையில் போய் உட்கார சொன்னது யார்? உண்மையை பேச மறுத்து ஊமையாகி விட்டது ஏன்? - வாகை சந்திரசேகர் கிளப்பும் பஞ்சாயத்து
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நடந்தாலும் நடைபெறுகிறது தினம் ஒரு பஞ்சாயத்து கிளம்புகிறது,
கருணாநிதிக்கும், விஜயகாந்திற்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை என்பதில் தொடங்கி விஜய் படம் கிளிப்பிங்ஸ் காட்டவில்லை, கடைசி வரிசையில் உட்கார சொன்னார் என்பதில் இருந்து “இது சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சியா? இல்லை கச்சேரியா?” என்று சத்தம் போட்டு பாடகர் எஸ்.பி.பி கையில் இருந்து மைக்கை பிடுங்கினார் தெலுங்கு டைரக்டர் ஆர்.நாராயணமூர்த்தி.
இப்போது வாகை சந்திரசேகர் புதிதாக ஒரு பிரச்சினையை அறிக்கை விட்டு கிளப்பியுள்ளார். ரஜினியையும் கமலையும் முதல்வர் அமர இருந்த வரிசையில் உட்கார விடாமல் எழுந்து போய் பின்னால் உட்கார சொன்னார்கள் என்று வாரிய சந்திரசேகர், சென்ற முறை பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழாவில் அஜீத் "மெறட்டுறாங்கய்யா" என்று குறிப்பிட்டதையும் சேர்த்து வாரியுள்ளார். இனி அவரது அறிக்கையில் சில பத்திகள்
விழாவில், ரஜினி காந்த் வந்து முதல்வர் அமர்ந்திருந்த முன் வரிசையில் அமர்ந்திருக்கிறார். அப்போது, ரஜினி யிடம் ஒருவர் வந்து காதில் ஏதோ சொன்னதும் அவர் எழுந்து பின் வரிசையில் போய் அமர்கிறார். அடுத்து வந்த கமலையும் இதேபோல் பின் வரிசையில் அமரச் செய்கிறார்கள். கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்த கலை உலக விழாவில் மேடையில் அமர்ந்திருந்த அவர், ரஜினி, கமலை மேடைக்கு அழைத்து தன் அருகிலே இடப்பக்கம் ஒருவரையும், வலப்பக்கம் ஒருவரையும் அமர வைக்கிறார். இருவரும் கருணாநிதியிடம் பரிசு பெற்றபோது, அவர்களை உச்சி முகர்ந்து வாழ்த்தி மகிழ்கிறார். இந்தக் காட்சியை கண்டு உலகமே மகிழ்ந்தது.
இதைப் போன்று மற்றொரு கலை உலக விழா. மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை கீழே அமர்ந்து முதல்வர் கருணாநிதி ரசித்துக் கொண்டிருக்கிறார். மேடையில் அஜீத் தன் உணர்வை வெளிப் படுத்தி பேசுகிறார். அதை ஆமோதிக்கும் வகையில் கருணாநிதி அருகில் அமர்ந்திருந்த ரஜினி எழுந்து கரவொலி எழுப்புகிறார். அன்று சுயமரியாதை பேசிய நடிகர் நண்பர்கள், தன்மான தத்துவம் பேசிய கலை நண்பர்கள், நூற்றாண்டு விழாவில் இத்தனை அவமானங்களையும் பொறுத்து பின் வரிசையில் அமர்ந்து அமைதி காத்தது ஏன்?
# இந்த அறிக்கை வெளிவந்தது வாகை சந்திரசேகருக்கு தெரியுமா?

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.