சேலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில், புதிய விமானிகள் பயிற்சி மற்றும் இயக்கம், பாராசூட் பயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிப்பது தொடர்பான பயிற்சி 4 பெண்கள் உள்பட 15 பேருக்கு அளிக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்து 3 பேர் வீதம், ஒவ்வொரு முறையும் பாராசூட் மூலம் கீழே குதித்தனர். இதே போல் 2 ஆண்கள், ஒரு பெண் பயிற்சி விமானிகள் என 3 பேரும், விமானம் 150 அடி உயரத்தில் பறந்த போது பாராசூட் மூலம் கீழே குதித்தனர். அப்பொழுது, பெண் பயிற்சி விமானியின் பாராசூட் ஒரு புறம் சுழலவில்லை. இதையடுத்து அவர் விமான நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரு விவசாய தோட்டத்தின் கரடு முரடான பகுதியில் விழுந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் சிலர், உயிருக்கு போராடி கொண்டிருந்த அப்பெண் விமானியை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த பெண் விமானியின் பெயர், ரம்யா, வயது 26, பெங்களூரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரிய வந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.