டிவிட்டர் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி கொண்டிருந்த இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தற்போது தன் டிவிட்டர் கணக்கை முடக்கி விட்டு வெளியேறி விட்டார். தான் இசையமைக்கும் படங்கள் பற்றிய செய்திகள், பாடல்கள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டு வந்தவர், தற்போது இஸ்லாம் மதத்தினைத் தழுவி இருப்பதையும், தனது டிவிட்டர் தளம் மூலமே உறுதி செய்தார்.
யுவனின் மதம் மாறும் முடிவு குறித்து, ரசிகர்கள் பலர் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து, தனது டிவிட்டர் கணக்கை முடக்கிவிட்டார், யுவன் சங்கர் ராஜா. முடக்குவதற்கு முன்பு, இதுநாள் வரை எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று இறுதியாக ஒரு செய்தியை டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.