மாணவர்கள் பேருந்துகளில் செய்யும் அட்டகாசத்தினால், பொதுமக்கள் பலரும் அன்றாடம் அவதிபட்டு கொண்டிருக்கின்றனர். இவர்கள் செய்யும் கலாட்டாவினால், காவல் துறைக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மாணவர்கள் பிரச்சினையை தீர்க்க எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தாலும், இதுவரை ஒரு நல்ல தீர்வு காண முடியவில்லை. ஆகவே, போலீசார், ஒரு புதிய உத்தியை கையாள இருக்கின்றனர்.
பஸ்களில் கலாட்டா செய்யும் மாணவர்களை, வீடியோகிராபர்கள் மூலம் ரகசியமாக படம் பிடிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் பஸ் ஊழியர்களையும், தங்கள் செல்போன் மூலம் ரகசியமாக படம் எடுக்க, போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறு எடுக்கப்படும் வீடியோ, செல்போன் படக்காட்சிகளை குறிப்பிட்ட மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளின் நிர்வாகத்திற்கு காட்டி உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் வீடியோ படக்காட்சிகளை குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் போட்டு காட்ட முடிவு செய்துள்ளனர். படக்காட்சிகளை போட்டு காட்டி மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கினால், நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலீசாரின் இந்த திட்டம், வரவேற்கபட வேண்டியது என நீங்கள் நினைத்தால், லைக் போடுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.