‘வனங்களை காப்போம்’ என்ற இயக்கத்தின் மூலம் மத்திய பிரதேச மாநில வனத்துறையினர் கடந்த வருடம் ஜீலை மாதம் 22ம் தேதி அன்று மரம் நடும் விழாக்களை நடத்தினர். 86 ஆயிரத்துக்கும் அதிகமான கிராம மக்களின் உதவியுடன் நடைபெற்ற இந்த விழாவில் காலை 9 மணியிலிருந்து மாலை 7 மணி வரை மாநிலம் தழுவிய அளவில் 55 லட்சத்து 26 ஆயிரத்து 945 மரங்கள் நடப்பட்டன.
நடுவர்கள் எதிரில் நடத்தப்பட்ட இந்த மரம் நடும் விழாவை உலக சாதனைகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் கின்னஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான சான்றிதழை லண்டனில் உள்ள கின்னஸ் நிறுவனம் மத்திய பிரதேச அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அம்மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநில வனத்துறையின் இச்சாதனை மிக அபாரமானது என நினைப்போர், லைக் போடுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.