நேற்று கூகுல் ஹேங்க் அவுட் மூலம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ஒடிசா, மஹாராஷ்ட்ரா, பஞ்சாப் என ஏழு மாநிலங்களில் உள்ள கட்சி தொண்டர்களிடம் உரையாடிய ராகுல் காந்தி பேசியதாவது:
100 சீட்களை மட்டுமே காங்கிரஸ் பெறும் என்று பல கருத்துக்கணிப்புகள் முடிவுகளை வெளியிட்டு வருவது நகைச்சுவையானவை. வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும், நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவது என்ற கேள்விக்கு இடமே இல்லை.
உங்களை நம்பிக்கையிழக்க செய்வதற்காகவே எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. நீங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருந்தால் நாம் அவர்களை நொறுக்கி விடலாம். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாமல் இருந்தால் நாம் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம்.
இதேபோல கடந்த 2004 தேர்தலிலும் நாங்கள் தோல்வியடைவோம் என்று பல கருத்துக்கணிப்புகள் முடிவுகளை வெளியிட்டது. ஆனால் காங்கரஸ் வெற்றி பெற்றது. 2009 தேர்தலிலும் அப்படித்தான் கூறின. ஆனால் அதைவிட இரண்டு மடங்கு வெற்றியை பெற்றோம்.
இப்போது மூன்றாவது தேர்தலை எதிர்நோக்குகிறோம். காங்கிரஸ் சரியாக செயல்படவில்லை என்று அவர்கள் எப்போதும் கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். நாம் கருத்துக்கணிப்புகளை சட்டம் என கருதிவிடக் கூடாது. வலுவான தேர்தலுக்காக போராட வேண்டும்.
நீங்கள் எதிர்கட்சியை பார்த்தால் தெரியும், ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு மனிதரால் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இதை அவர்களுடைய மூத்த தலைவர்களே சொல்கிறார்கள். அவர்கள் ஒரு பக்கமாக சென்று கொண்டிருக்கிறார்கள். நாம் அதற்கு முற்றிலும் மாறான மற்றொரு திசையில் சென்று கொண்டிருக்கிறோம்.”
இவ்வாறு ராகுல் காந்தி தனது உரையாடலின் போது காங்கிரஸ் தொண்டர்களிடம் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.