திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிடித்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத நிலையில், இன்று 5–வது நாளாக 40 அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீணை அணைக்கும் பணியில் கோவில் ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் என 300–க்கும் மேற்பட்டவர்கள் முயற்சி செய்தனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாததால் நேற்று கவர்னர் நரசிம்மன் மத்திய அரசுடன் பேசி ராணுவ உதவியை கோரினார். ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் விமானம் வந்தால்தான் தீயை அணைக்க முடியும் என்று கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற மத்திய அரசு உடனடியாக அரக்கோணம் விமானப்படை தளத்தில் இருந்து எம்.ஜ.17 என்ற ஹெலிகாப்டரை திருமலைக்கு அனுப்பியது. அது வனப்பகுதியில் வட்டமிட்டு எங்கெங்கு தீ எரிகிறது. அதை அணைக்க என்ன வழி என்று ஆராய்ந்தது.
இதையடுத்து மேலும் 4 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு மீட்பு விமானத்தில் ராணுவ வீரர்கள் வருகிறார்கள். ஏழுமலையான் கோவில் மேல் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பறக்க கூடாது என்பது ஆகம வீதியாக உள்ளது. அதனை மீறாமல் தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.