டெல்லியில் இருந்து சென்ற இன்டிகோ விமானம், நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், திடீரென பின்பக்க டயரில் தீப்பிடித்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். இதைக் கவனித்த பொறியாளர்கள் உடனடியாக விமானத்தில் உள்ளவர்களை வெளியேற்றும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு 171 பயணிகளை கீழே இறக்கினர். மீதமுள்ள பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் முன்பகுதியில் வழக்கமாக வரும் படிக்கட்டு வழியாக வெளியேறினர். 81 வினாடிகளில் அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இண்டிகோ நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் காத்மண்டுவுக்கு விரைந்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.