திமுக கூட்டணியின் நீண்ட நாளாக இருப்பவரும் திமுக தொடர்பான ஈழநிலைப்பாட்டிற்கும் அதன் காங்கிரஸ் கூட்டணிக்கும் திமுகவினரை விட அதிக விளக்கங்கள் கொடுத்தவர் திருமாவளவன்,
திமுகவுக்கு நம்பிக்கையான கூட்டாளியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்திருந்தாலும் தொகுதி பங்கீட்டில் திமுக ஒரே ஒரு தொகுதியை மட்டுமே விடுதலை சிறுத்தைகளுக்கு அளித்துள்ளது.
5 தொகுதிகள் கேட்ட திருமாவளவன் குறைந்தது சென்ற முறை கிடைத்த இரண்டு தொகுதிகளாவது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது குறித்து கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது. இந்நிலையில் தி ஹிந்து பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில்
திமுக கூட்டணியில் நாங்கள் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய தனித் தொகுதிகளையும் மயிலாடுதுறை அல்லது தருமபுரி மற்றும் தேனி என 5 தொகுதிகளை கேட்டோம்.
இதில் 3 தனித் தொகுதிகள் கட்டாயம் தேவை என்று வலியுறுத்தினோம். கடந்த 3-ம் தேதி இரவுகூட உங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன என்றார்கள். இதனால், இருநாட்கள் நாங்கள் திமுக தரப்பினரிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால், இடையே சிலர் குழப்பம் ஏற்படுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கடந்த 6-ம் தேதி என்னை அழைத்த திமுக தலைவர் கருணாநிதி, ‘ஒரு தொகுதி மட்டும்தான். சூழ்நிலை அப்படி. தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள். முதலில் கையெழுத்திடுங்கள், பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று என்னிடம் வற்புறுத்தினார்.
மூத்த அரசியல் தலைவர் என்கிற முக நாகரிகத்துக்காகவும் கூட்டணி தர்மத்துக்காகவும் வேறு வழியின்றி கையெழுத்திட்டேன். மேலும், தனித்துப் போட்டியிடுவதால் எந்தப் பலனும் இல்லை.
ஓட்டுகள் சிதறுவது எதிரிகளுக் குதான் லாபம் என்பதால் ஒரு தொகுதியை ஏற்றுக்கொண்டோம்.
ஆனால், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளிடம் கடுமையான அதிருப்தி நிலவுகிறது அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி வருகிறேன்” என்றார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.