காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று பழங்குடி பெண்களுடன் கலந்துரையாடினார். பத்பத்பாரா கிராமத்தில் உள்ள ஒரு மரத்தடியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, அப்பகுதி மக்களிடையே தான் பேச வரவில்லை என்று கூறிய ராகுல் காந்தி, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை கேட்டறிய வந்ததாக குறிப்பிட்டார்.
அங்குள்ள காடுகளில் முக்கிய தொழிலாக விளங்கும் பீடி இலை உற்பத்தி மற்றும் சேகரிப்பு பணியை ராகுல் காந்தி அரை மணி நேரம் பார்வையிட்டார்.
அப்போது, தங்கள் பகுதியில் முக்கிய தொழிலாக விளங்கும் பீடி இலை சேகரிப்பு பணி மிகவும் கடினமானது என்றும், அடிக்கடி குழந்தைகள் மற்றும் குடும்பத்தை விட்டு செல்ல வேண்டியுள்ளது என்றும் ஒரு பெண் தெரிவித்தார். குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்று மற்றொரு பெண் கூறினார். மற்றொரு பெண், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊதியம் குறைவாக கிடைப்பதாக குறை கூறினார். அவர்களின் குறைகளை பொறுமையாகக் கேட்ட ராகுல்காந்தி, எந்த பயமும் இன்றி இந்த பெண்கள் பேசியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.