உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி, ஏன் அதை தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மை அற்றவர் என்று கடுமையான வார்த்தைகளால், மோடியை தாக்கி பேசினார்.
காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தியுமே கூட, சல்மான் குர்ஷித் கருத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். சல்மான் குர்ஷித் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது என கூறினார்.
கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சல்மான் குர்ஷித் உத்தரபிரதேசத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான பருக்காயத்தில் கூறியதாவது :-
"நரேந்திர மோடி குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது தன் கடமையை செய்ய தவறி விட்டார். முதல்வர் பதவிக்குரிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை. கடமையை செய்யாமல் தன் பொறுப்பில் இருந்து தோல்வி அடைந்தவரை ஆண்மையற்றவர் என்றுதான் சொல்வேன். அவரை வேறு எப்படி சொல்ல முடியும்? இன்று மட்டுமல்ல அவர் பற்றி பேசும் போதெல்லாம் நான் இப்படித்தான் சொல்வேன்.",என மறுபடியும் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
சல்மான் குர்ஷித்தின் பேச்சு அநாகரீகமாக உள்ளது என நினைத்தால், உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.