இன்று ஆந்திராவில் ஏழாம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது . அப்போது நடிகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீரஞ்சீவி தனது குடும்பத்துடன் வாக்களிக்க வந்தார் . அப்போது அவர் வரிசையில் நிற்காமல் முன்னே செல்ல முயற்சித்தார் . அப்போது ராஜ கார்த்திக் என்னும் இளைஞர் அவரை தடுத்து நிறுத்தி , " நீங்கள் அமைச்சர் தான் , மூத்த குடிமகன் இல்லை , எனவே வரிசையில் வரவும் எனக் கூறினார் . இதை அருகில் இருந்து பார்த்த மக்கள் கைத்தட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர் . இதனால் சீரஞ்சீவி பின்னே சென்று வரிசையில் நின்றார் .
சீரஞ்சீவி பின்னே அளித்த பேட்டியில் தான் தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என பார்க்க சென்றதாக கூறினார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.