BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 April 2014

மோடியின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொள்ளாதீர்கள் - வாரணாசியில் கெஜ்ரிவால் !!

வாரணாசியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் , நாங்கள் ஒரு கிராமத்திற்கு சென்றோம் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் என்னைக் கண்டவுடன் மோடி மோடி என கோஷமிட்டனர் . பிறகு அவர்களை பார்த்து மோடி ஏன் பிரதமர் ஆக வேண்டும் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை . அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி எரிவாயு விலை உயர்வு தொடர்பான பதிவுகளை காண்பித்தோம் . பிறகு அவர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்தனர் . இந்த ஊடகங்கள் காட்டுவது வெறும் போதை . நீங்கள் உங்கள் சுயத்தை இழந்து விடாதீர்கள் . இப்போது மோடிக்கு ஆதரவை தெரிவித்து பின்னர் வருத்தப்படாதீர்கள் என்றார் .

 மேலும் நாங்கள் லால் பகதூர் சாஸ்திரி போன்று கொள்கைக்காக பதவியை ராஜினாமா செய்தோம் . கொள்கைக்காக நாங்கள் நூறு முறைக்கூட பதவி இழப்போம் . தேர்தல் முடிந்த பின்னர் எரிவாயு விலை உயர உள்ளது . நீங்கள் எங்களை பாராளுமன்றம் அனுப்பினால் நாங்கள் அதை தடுத்து நிறுத்தவோம் என்றார் .

வாரணாசி மக்கள் மோடியை தோற்கடித்தால் இந்த வரலாற்று சிறப்புமிக்க நகரம் மீண்டும் ஒருமுறை வரலாற்றில் இடம்பெறும் என்று கூறினார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media