தற்போது தலைமை நீதிபதியாக உள்ளவர் சதாசிவம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்ட பல முற்போக்கான தீர்ப்புகளை வழங்கியுள்ளார், குறிப்பாக தூக்கு தண்டனை தொடர்பான அதிலும் ராஜீவ் காந்தை கொலை தொடர்பான தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்தார், இவர்கள் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் இவர்கள் விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என்றார்.
உடனடியாக முதல்வர் ஜெயலலிதா இந்த மூவர் மற்றும் அதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் மேலும் நால்வர் என ஏழு பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார், இதை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது, இந்த வழக்கின் தீர்ப்பில் தான் ஏழு தமிழர்களின் விடுதலை உள்ளது.
நீதிபதி சதாசிவம் அவர்கள் ஏப்ரல் 25ம் தேதி பதவி ஓய்வு பெறுகிறார், அதற்கு முன் இந்த வழக்கின் முக்கிய தீர்ப்பை வழங்க போகிறேன் என்று ஒரு விழாவில் பேசினார், ஏழு பேர் விடுதலையை தீர்ப்பாக வழங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் கருணாநிதி இன்று தீர்ப்பை தேர்தலுக்கு முன் வெளியிடக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டு ஏழு பேர் விடுதலையின் குரூர அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளார்.
ஏப்ரல் 25ம் தேதிக்கு பின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பவரின் சிந்தனை வேறு போக்கில் இருந்தால் ஏழு தமிழர்கள் விடுதலையாவது நடக்காத காரியமாகிவிடும், ஏப்ரல் 24ம் தேதி தேர்தலுக்கு முன்பே ஏழு பேர் விடுதலை குறித்து தீர்ப்பு வந்தால் அது ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆதாயமாகிவிடும் என்று பயப்படும் கருணாநிதி அதன் விளைவாகவே இன்று இந்த தீர்ப்பை 25ம் தேதிக்குள் வெளியிடுவேன் என்று நீதிபதி கூறியதை விமர்சித்துள்ளார்.
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் என்றும், கல்லில் கட்டி கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகி மிதந்து தமிழர்களுக்கு உதவுவேன் என்றும் உசுப்பேற்றும் வார்த்தைகளில் தமிழ் என்றும் தமிழர் நலன் என்றும் விளையாடிய கருணாநிதி 23 ஆண்டுகளாக சிறையில் வதைபடும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு இன்று இவரே வினையாகியுள்ளார்.
# கருணாநிதியின் இந்த எதிர்ப்பு சரியா? இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்டில் எழுதுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.