ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்–பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஆறாம் தேதி இரவு நடந்தது . அப்போது 17ஆம் ஓவர் வீச ஸ்டார்க்
வந்தார் . அப்போது பொல்லார்ட் ஏதோ காரணத்திறகாக பந்து பிடிக்க நிற்கவில்லை . ஆனால்
ஸ்டார்க் தொடர்ந்து ஓடி வந்து பந்தை பொல்லார்ட் நோக்கி வீசினார் . இதனால்
ஆத்திரமடைந்த பொல்லார்ட் பேட்டை ஸ்டார்க் மீது ஓங்கி வீசினார் . அதிர்ஷ்டவசமாக அது
கை தவறி பொல்லார்ட் அருகினில் விழுந்தது . களத்தில் இருந்த நடுவர்கள் சண்டையை பேசி
முடித்தனர் . பின்னர் பொல்லார்டின் சக நாட்டு வீரரான கெயில் பொல்லார்டை
சமாதானம்
செய்தார் .
போட்டி முடிந்த பின்னர் ஸ்டார்க் , பொல்லர்ட் இருவருக்கும் அபராதம்
விதிக்கப்பட்டது . ஸ்டார்க் 50சதவீதம் அபராதமும் , பொல்லார்டுக்கு 75 சதவீத
அபராதமும் விதிக்கப்பட்டது .
இதன் பின்னர் கெயில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எவ்வாறு பொல்லர்டை சமாதானம்
செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் , நான் பொல்லார்ட் தலையில் குட்டு விடுவேன்
என்று சொல்லி சமாதானம் செய்த்தாக கூறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.