பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி தனித்து ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில், தற்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடுத்த வாரமே புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக நரேந்திரமோடி குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகுவார். இதனால் குஜராத் மாநிலத்துக்கு புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காந்திநகரில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வரை ஏகமனதாக தேர்ந்து எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய முதல்வர் பதவியை பெற குஜராத் வருவாய் துறை மந்திரி அனந்திபென் படேல், நிதி மந்திரி நிதீன்படேல் மற்றும் மந்திரி சவுரப்படேல் ஆகிய 3 பேர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆனால் முதல்வர் பதவியை பெற அனந்திபென் படேலுக்கே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவாக உள்ளனர். குஜராத்தில் 1998–ம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக அனந்திபென் படேல் அமைச்சராக இருந்து வருகிறார். சாலை மேம்பாடு, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை என்று பல துறைகளில் பணியாற்றி நன்கு அனுபவம் பெற்றவர்.
மேலும் இவருக்கு நரேந்திர மோடியின் ஆதரவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.