கடந்த ஒன்றரை மாதங்களாக ஒன்பது கட்டங்களாக நடந்த தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின . அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர் .
இதுபற்றி கருத்து தெரிவித்த காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கூறுகையில் , தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது . சில மாநிலங்களில் ஒவ்வொரு கணிப்பும் மிகப் பெரிய அளவில் வித்தியாசத்துடன் வெளியிட்டதை சுட்டிக்காட்டி ,இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நம்பகத்தன்மையை இழந்து விட்டனர் என்று குறிப்பிட்டார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.