மேற்கு துருக்கியில் உள்ள சோமா நகரில் உள்ள நிலக்கரிக் சுரங்கத்தில் செவ்வாய் கிழமை அன்று மினசார சப்ளை செய்யும் பிரிவில் திடீரென தீப் பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தல் அங்கு பணி செய்தவர்கள் அங்கும் இங்கும் ஓடினர் . தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து 450 அடி ஆழத்தில் மீட்கும் பணியில் ஈடுபட்டனர் . இதுவரை 300 க்கும் மேற்பட்டொர் மீட்கப்பட்டுள்ளனர் . அதில் 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் .
இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கலாம் என செய்திகள் வருகின்றனர் . விபத்து நடக்கும் போது 800க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தில் இருந்ததால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது .
இந்த விபத்து மொத்த துருக்கி நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . அந்நாட்டின் பிரதமர் ரீசெப் தய்யிப் எர்டோகன் இந்த நிகழ்விற்கு பின் தன் அல்பானியா நாட்டுப் பயணத்தை தள்ளிவைத்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.