மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவும், காங்கிரஸுக்கு பாதகமாகவும் இருக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராகுல் காந்திதான் எங்களது எதிர் காலத் தலைவர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சல்மான் குர்ஷித்:
ராகுல் காந்தி குறித்து விமர்சிப்பது தேவையற்றது. அவர்தான் கட்சியின் எதிர்காலத் தலைவர். அவர் மீது நாங்கள் மிகுந்த நம் பிக்கை வைத்துள்ளோம். எந்தச் சூழ்நிலையிலும் முன்வரிசையில் நின்று அவர் கட்சியை வழி நடத்துவார்.
பாஜகவை போன்று தேர்தலை கருத்திற் கொண்டு நாங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பது இல்லை. கொள்கைகளின் அடிப் படையில் தலைவரைத் தேர்ந் தெடுக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸை பொறுத்தவரை வேட்பாளர்கள், மாவட்ட குழுக்கள், மாநிலக் குழுக்கள், தேசிய தலைமை என 4 நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்.
ஜெய்ராம் ரமேஷ்:
ராகுல் காந்தி மிகச் சிறந்த பிரச்சாரகர். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று 125-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்றுள்ளார். கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் காரணியாக அவர் விளங்கினார். அவரது பிரச்சாரத்தால் மக்களி டையே காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
கமல்நாத்:
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ராகுல் காந்தி எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை. அவர் மீது எந்தக் குறையும் கூற முடியாது.
காங்கிரஸ் ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களை மக்களிடம் முறை யாக எடுத்துரைக்கவில்லை என்றே கருதுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் எதுவுமே செய்யவில்லை என்று கூறுவது அபத்தமானது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.