நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது,
சிறு தவறுகள் கூட ஏற்படாமல் இருப்பதற்காக புதிய நடை முறையை பின்பற்ற
இருப்பதாக தலைமை தேர்தல் பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் அறையில் 14 மேசைகள் இருக்கும். அந்த மேசைகளில் எண்ணப் படும் வாக்குகள், ஒவ்வொரு சுற்று முடிவின்போதும் அறிவிக்கப்படும். வழக்கமாக, மொத்தமாக எண்ணப் பட்டுள்ள வாக்குகளின் விவரம்தான் ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிக்கப் படுவது வழக்கம். அதில் மாற்றம் செய்து, ஒவ்வொரு மேசை யில் எண்ணப்படும் வாக்குகளும் தனித்தனியாக தொகுக்கப் பட்டு, முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
மேசையில் எண்ணப்படும் வாக்குகள், தேர்தல் நுண்பார்வை யாளரால் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கப்பட்டு, தேர்தல் துறைக்கு ஆன்லைனில் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகுதான், ஒவ்வொரு சுற்று முடிவுகளும் வெளியாகும். அதுமட்டுமின்றி வேட்பாளரின் ஏஜென்டுகளுக்கு மேசை வாக்குகள் பற்றிய விவரங்கள் ஒரு தாளில் கொடுக்கப்படும்.
இதனால், ஒவ்வொரு சுற்று முடிவு அறிவிப்புக்கும் 20 நிமிடம் வரை வழக்கத்தை விட கூடுதலாக நேரம் ஆகும். எனவே முன்பு சொன்னதுபோல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படும்.
இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.