கூடங்குளம் அணு உலை விபத்து குறித்து அறிவியல்பூர்வ விசாரணை நடத்த வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள் ளார். ஆனால், ‘விபத்து எதுவும் நடக்கவில்லை. அணுஉலை பாது காப்பாக உள்ளது, பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்’ என்று கூடங் குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணு மின் கழகம் சார்பில் கூடங்குளம் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
கூடங்குளம் நிலையத்தில் நீராவி குழாய் உடைப்பு மற்றும் வெடிப்பு போன்ற எந்த விபத்தும் நடக்க வில்லை. அதுபோன்ற தகவல்கள் மற்றும் செய்திகள் தவறானவை. புதன்கிழமை பகல் 12.10 மணிக்கு முதல் அலகில் பராமரிப்பு பணி நடந்தபோது, வால்விலிருந்து கொதி நீர் வழிந்ததில், அணு மின் நிலைய 3 பணியாளர்களும், 3 தற்காலிக பணியாளர்களும் காய மடைந்தனர். அவர்களுக்கு உடனடி யாக முதலுதவி தரப்பட்டு, அணு விஜய் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் நாகர் கோவில் சிறப்பு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். கூடங் குளம் அணுமின் நிலைய முதல் அலகில் கடந்த 5-ம் தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு 900 மெகாவாட் உற்பத்தி திறன் எட்டப்பட்டது. பின்னர் 12-ம் தேதி பராமரிப்பு பணிக்காக இயக்கம் நிறுத்தப்பட்டது. புதன்கிழமை காலை அணு மின் நிலையம் மீண்டும் இயக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. அணுமின் நிலையத்தை அருகிலுள்ள கிராமங் களைச் சேர்ந்த சுமார் 60 பேர் நேரடியாக புதன்கிழமை பார்த்தனர். அணு உலை மிகவும் பத்திரமாக, பாதுகாப்பாக உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.