காந்தியின் மூத்த மகன் ஹரிலால் என்பவர் மதுவுக்கு, மாதுவிற்கும் அடிமையாகி, தந்தையின் அதிருப்திக்கு ஆளானார். பிற்காலத்தில் அவரை தனது மகனே அல்ல என்று காந்தி தள்ளிவைத்ததாகவும், சட்டபூர்வமாக விடுதலைப் பத்திரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஹரிலால் பெற்ற மகளையே பலவந்தப் படுத்தி கற்பழிக்க துணிந்தவர் என்ற அதிர்ச்சி தகவல், தனது மகனுக்கு காந்தி எழுதிய கடிதத்தின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
‘நாட்டின் விடுதலையை விட, உனது பிரச்சனை எனக்கு மிகவும் கடினமான பிரச்சனையாக உள்ளது. உன்னைப் பற்றி பல பயங்கரமான தகவல்களை மனு (ஹரிலாலின் மகள்) கூறுகிறாள். அவளது எட்டாவது வயதில் இருந்து நீ அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவளது நிலைமை மோசம் அடைந்ததாகவும் எனக்கு தெரியவந்துள்ளது’ என தனது கைப்பட மகனுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கடிதத்தில், ‘நீ இன்னும் மது மற்றும் விபச்சார பழக்கங்களில் இருந்து விடுபடவில்லையா? மதுவுக்குள் மூழ்கிக் கிடப்பதைவிட நீ இறந்து விடுவதே மேலானது என நான் கருதுகிறேன்’ என்று காந்தி எச்சரித்துள்ளார்.
காந்தி தனது கைப்பட எழுதிய இந்த கடிதங்கள் உள்பட மேலும் சில கடிதங்களை இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனம் வரும் 22-ம் தேதி ஏலத்தில் விட உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.