பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று ஓட்டுப்பதிவுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அந்த அடிப்படையில், ஓட்டு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான இன்று, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் அனைவருடனும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை எப்படி எடுத்துக் கூற வேண்டும் என்று அவர் விளக்குகிறார். அதாவது, தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியினர் அனைவரும் ஒரே குரலில் ஒற்றுமையாக, தெளிவாக பேச வேண்டும் என்பதை உறுதிசெய்வதற்காகவே இந்த ஆலோசனைக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தெளிவின்றி அமைந்தால், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பணியாற்றுவதா? அல்லது பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க மற்ற கட்சிகளுடன் இணைந்து முயற்சிப்பதா? என்பது பற்றியும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும். இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்துக்கு தலைமை தாங்கிய ராகுல் காந்தியை தோல்விப்பழியில் இருந்து பாதுகாக்கும் பணியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.