திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் எஸ். காந்திராஜன் 1,25,845 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த சீவல்சரகு ஊராட்சியின் திமுக செயலர் கிட்டு, கட்சித் தொண்டர்கள் மோகன், சரவணன், ராசப்பன், முருகேசன் ஆகிய 5 பேர் பழைய செம்பட்டியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலர் குலோத்துங்கன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மொட்டை போட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து சீவல்சரகு ஊராட்சி திமுக செயலர் கிட்டு கூறியது:
‘தேர்தலில் திமுகவின் படு தோல்வி எங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. எங்கள் சோகத்தை வெளிக்காட்டுவதற் காக மொட்டை போட்டுள்ளோம். அதிமுகவைப்போல எளியவர்களும் பதவிக்கு வர திமுகவில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். திமுகவைப் பலப்படுத்த கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை மாற்றம் செய்ய வேண்டும்’ என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.