மஹாரஷ்ட்ராவில் உள்ள மோட்டார் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி . அந்த நல்ல செய்தி என்னவென்றால் ரோட்டில் உள்ள 44 வரி வசூலிக்கும் மையங்களை மூட உத்தரவிட்டுள்ளது . இந்த அறிவிப்பை மஹாராஷ்ட்ராவின் துணை முதல்வர் அஜித் பவார் நேற்று அறிவித்தார் .
முதல்வர் பிரித்வி ராஜ் சவுகான் கூறும் போது ," நாங்கள் இதற்கான கொள்கையை மக்களவை தேர்தலுக்கு முன்னே ஆராய்ந்து கொண்டு இருந்தோம் . சில மையங்கள் தங்களின் கடைசிக் கட்ட வசூலில் இருக்கின்றனர் . அவர்களுக்கு இன்னும் ஒரு சிறியத் தொகை மட்டுமே பாக்கி உள்ளது . இந்த சிறிய தொகையை நாங்கள் செலுத்தி அந்த மையங்களை மூட உள்ளோம் . அவர்களுக்கு 309 கோடி செலுத்த உள்ளோம் , ஆனால் இது பொது மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் " என்றார் .
சென்ற வருடம் இந்த வரி மையங்களை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடந்தது . ராஜ் தாக்கரே தலைமை தாங்கி பல போராட்டாங்களை நடத்தினார் .
சட்டமன்ற தேர்தல் அருகில் வர உள்ள நிலையில் சவுகான் அரசு மக்களின் மனதில் இடம் பிடிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.