இன்றைய தேதியில் இந்தியாவின் சிறந்த கேப்டன்கள் யார் என்றால் அது முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ், சவுரவ் கங்குலி மற்றும் இப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனியை தான் கூறுவார்கள். இதில் தோனி இந்தியாவுக்கு என 50 ஒவர் உலக கோப்பை, 20 ஒவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் என பல சிறப்புகளை பெற்று தந்தார். இந்திய அணி இப்போது வெளிநாடுகளில் தடுமாறி வரும் நிலையில் அவரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி விட்டு புதிய கேப்டனாக விராத் கோலியை போடுமாறு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஐயன் சேப்பல் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இந்தியா கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் வென்றது 2011 இல் தான். இந்தியா தொடர்ந்து தோல்விகளை தான் சந்தித்து வருகிறது. அதற்காக தோனியை கேப்டன் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்பது மிகவும் தவறு ஆகும். இந்தியா பிரச்சனை இப்போது ஒரு சிறந்த அணியை உருவாக்குவதில். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிகளின் தூண்களாக இருந்த சச்சின், டிராவிட், லஷ்மனன் ஆகியோர் ஒரே நேரத்தில் ஒய்வு பெற்று விட்டனர். இதில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கு காலம் எடுக்கலாம். அது வரை நாம் அவர்களுக்கு பக்க துணையுடன் இருக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு கோலியை கேப்டனாக்க வேண்டும் என்பது முட்டாள் தனமான பேச்சாகும். அவர் வளர்ந்து வரும் வீரர் அவரிடம் இந்த சுமையை தர கூடாது.
கிரேக் சேப்பலால் கங்குலி என்னும் சிறந்த கேப்டனை இழந்தோம், இப்போது ஐயன் சேப்பலால் தோனி என்னும் சிறந்த கேப்டனை இழந்து விட கூடாது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.