இன்னும் ஒரு 15 ஆண்டுகள் ஆனாலும் கருப்பு நிற குட்டை ஸ்கர்ட் என்பதை ராணுவ உடையைப் போல பப் மற்றும் டிஸ்க்களுக்கு அணிந்து வரும் பெண்களைக் கொண்ட நாடாகத் தான் நமது நாடு இருந்திடும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை . ஸ்கர்ட்டை விட ஹேன்ட் பேக் பெரியதாக இருக்கும் , (உள்ளே துழாவினால் மொத்தமும் சில்லரையுமாக 300 ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம் என்பது வேற டிபார்ட்மெண்ட் .)
பெரும்பாலும் டிஸ்க் களுக்கு புதன் கிழமைகள் அல்லது வெள்ளிக் கிழமைகள் பெண்களுக்கு என்று சிறப்பு சலுகைகள் கொண்ட அனுமதியிருக்கும் என்றாலும் , 3 பெக் அடித்தாலே தலை கிர்ரென்று சுத்தும் என்பதனாலோ அல்லது உண்மையிலேயே இங்கிதம் தெரிந்திருப்பதனாலோ , காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதையாக இவர்கள் குடிப்பதில்லை என்பதை ஆண்கள் தலை குனிந்து ஏற்கத் தான் வேண்டும் .
ஆனால் , குட்டை ஸ்கர்ட் அணிந்துக் கொண்டு லிப்ஸ்டிக்கிற்கு நடுவில் வாயை வைத்திருப்பதனாலேயே இவர்கள் கிளியோபாட்ராக்கள் கிடையாது என்பது இவர்களுக்கு புரியும் நாள் , பாரதியின் புதுமைப் பெண்கள் பிறந்த நாள் என்று எடுத்துக் கொள்ளலாம் .
மெதுவாக குடிப்பது நல்ல விஷயம் தான் அதற்காக , காக்டேயிலில் கலக்கப் பட்டிருக்கும் கலப்படங்கள் எல்லாம் கிளாசில் கீழே தேங்கும் வரை அதை வைத்துருப்பானே ? இதில் இன்னொரு கூத்தும் அரங்கேறும் , பாதிக்கு மேல் வருவது எல்லாமே ஓசி குடிக்கு தான் என்பதனால் , பார் கவுண்டரில் ஒரு லார்ஜ் என்றால் ஒரு ஸ்மால் மற்றும் கலப்படங்கள் என்பது எழுதப் படாத விதி .
மூணு பிச்சர் பீர் அடிச்சிருப்பவனே அடக்கிட்டு உக்காந்திருப்பான் , இவங்க ரெண்டு கிளாஸ் வைனை இரண்டரை மணி நேரம் குடிப்பதுமில்லாமல் , 12 முறை பாத்ரூமுக்கு போயிட்டு வருவது ஏன் என்பது இது வரை புரியாத புதிர் தான் .
அப்பறம் , அது எப்படி சொல்லி வைத்தார் போல எல்லாரும் அதே ஏம்வே ஷாம்பூவை உபயோகிக்கறீங்க ? அதையும் யாராவது ஓசியில் தராங்களா ? மேலும் , 2 நிமிஷத்துக்கு ஒரு முறை தலையை கோதி விட்டாத் தான் உங்களை அழகிகள் பட்டியலில் சேர்ப்பார்கள் என்று உங்க கிட்ட யார் சொன்னது ? பல பப்களில் சிகரெட்டுக்கு அனுமதியில்லை என்றாலும் , சிகரெட் பிடிக்கும் வசதி கொண்ட பப்களில் சில பெண்கள் செய்யும் அலப்பரை தனி ரகம் தான் . smoking is about living the moment , its not about making a statement என்பது இவர்களில் பலருக்கு புரியாது போல , சிகரெட் பிடித்து தங்களை மாடர்ன் கர்ல்ஸ் என்று காட்டிக் கொள்ள உள்ளே இழுக்கத் தெரியாமல் இழுத்து , பக்கத்தில் இருப்பவர்களையும் புகை மண்டலத்தில் ஆழ்த்தி விடுவது இவர்களது வழக்கம் .
இன்னொன்னு முக்கியமா சொல்லியாகனும் , நீங்க உங்க கூட துணைக்கு ஒரு பழுத்த வழுக்கை மண்டையை கூட்டி வருவது உங்கள் விருப்பம் , அது ஏன் எதற்கு என்கிற ஆராய்ச்சியில் எல்லாம் நாங்கள் இறங்கப் போவதில்லை , ஆனால் அதுக்காக பசங்க உங்களை பார்த்தாலோ , அல்லது நீங்க பசங்களை பார்த்தாலோ , அந்த வழுக்கை மண்டையை இறுக்க அணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமே இல்லை , உங்க காதல் எங்களுக்கு புரியுது .
உங்களிடம் சில்மிஷம் செய்யுற பசங்களை கூட சகிச்சிக்கறீங்க ,ஆனால் உங்களை விட குட்டையா ஸ்கர்ட் போட்டு வரும் பெண்களை எல்லாம் எதற்கு பிட்ச் ( bitch ) என்று திட்டறீங்க ? உங்களுக்குள்ள போட்டியிருக்கலாம் பொறாமை இருக்கக் கூடாது .
இறுதியாக எனது வேண்டுகோள் , ஒரு மாற்றத்திற்கு ஒரு பொண்ணாவது புடவை கட்டிக் கொண்டு பப் / டிஸ்கிற்கு வரலாமே .
கிஷோர் கே ஸ்வாமி ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.