BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 9 July 2014

பாஜகவின் அடுத்த தலைவர் அமித் ஷா !!



பிரதமரின் மோடியின் நெருங்கிய நண்பரும் , மோடிக்கு வலது கையாகவும் இருக்கும் அமித் ஷா பாஜகவின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . முந்தைய தலைவர் ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதால் , பாஜக வின் அடுத்த தலைவர் பொறுப்பை நியமிக்கப்பட்டார் .

அமித் ஷா பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் , இந்த வருடம் பாஜக கட்சியை உத்தர பிரதேசத்தில் ஆழமாக கால் ஊன்ற வைத்தது அமித் ஷா என்று சொன்னால் யாரும் மறுக்க மாட்டார்கள் . இவர் மோடி நினைப்பதை அடுத்த நிமிடமே செய்து முடிப்பவர் .

இன்று நடந்த கூட்டத்தில் இவரை பாஜக தலைவராக நியமித்த பின் , ராஜ்நாத் சிங் கூறுகையில் , " அமித் ஷா இதுவரை யாரும் செய்யாத உத்தர பிரதேசத்தில் இமாலய வெற்றியை பெற்று தந்தார் , இதனால் இவருக்கு தேசிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது " என்றார் .

இவரின் தேர்வை தொண்டர்கள் இனிப்பு பறிமாறியும் , மேளம் அடித்தும் கொண்டாடினர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media