தற்போதைய மத்திய அரசு கருப்பு பணத்தை மீட்டுத் தர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தது . இதற்காக ஸ்விஸ் வங்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது .
ஆனால் இப்போது அந்த கருப்பு பணத்தை மீட்பதில் புதிய பிரச்சனை வந்துள்ளது . புதிய திருப்பமாக கருப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டியலில் இந்தியர்கள் தங்கள் பெயரில் டெபாசிட் செய்தது பற்றி எந்த விவரமும் இல்லை என சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது .
இந்தியர்கள் கருப்பு பணம் நிறைய வைத்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் அனைவரும் கூறிய பின் , இந்தியா கருப்பு பணத்தை மீட்க , கருப்பு பணம் வைத்து இருப்பவர்களின் பட்டியலை , அனுப்பும்படி சுவிஸ் வங்கிக்கு கடிதம் எழுதியது . அந்த கடிதத்திற்கு பதில் எழுதிய சுவிஸ் வங்கி , கருப்பு பண பட்டியலில் இந்தியர்கள் யாரும் தங்கள் பெயரிலோ தங்களின் பினாமி பெயரிலோ வங்கி கணக்கை தொடரவில்லை என பதில் கூறினர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.