பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது கங்கை நதியை சுத்தப்படுத்துவதை தனது திட்டமாக அறிவித்து இருந்தார் . இந்த திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 80,000 கோடி வரை செலவாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார் .
அவர் கூறுகையில் , " தண்ணீர் மாசுபடுவது தான் கங்கையின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது . சுத்தமான நதியை உருவாக்க நாம் இதை நிறுத்த வேண்டும் . அதனால் இந்த திட்டத்திற்கு வரை செலவாகும் . இந்த முழு பணத்தையும் எங்களால் கொடுக்க இயலாது . எனவே 30 சதவீத பணத்தை மத்திய அரசு கொடுக்கும் , மீதி 70 சதவீதத்தை பிபிபி முறையில் கொடுக்கப்படும் " என்றார்
. மேலும் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் திட்டத்தை பின்பற்ற வலியுறுத்தினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.