திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான திபக் ஹல்டார் தனது பேச்சினால் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் . ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டபாஸ் பவுல் தனது பேச்சினால் மனித உரிமைகள் இயக்கங்களிடம் இருந்து கடுமையான கண்டனங்களை வாங்கிக் கொண்டார் .
நேற்று திபக் ஹல்டார் அளித்த பேட்டியில் , " கற்பழிப்புகள் முந்தியும் நடந்து கொண்டு இருந்தது , இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது . அது போல உலகம் இருக்கும் வரை கற்பழிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கும் மேலும் , நாங்கள் கற்பழிப்பை எப்போதும் ஆதரிக்க மாட்டோம் . ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி நினைத்தால் மற்றும் கற்பழிப்பை தடுத்து விட முடியாது " என்றார் .
இப்படி பேசிய அமைச்சர் மீது கட்சி தலைமையகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அல்லது மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.