இலங்கையின் பாதுகாப்பு இணையதளத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவை கீழ்தரமாக சித்தரித்து , வெளியான ஒரு பதிவு ஒன்று வெளி ஆகி இருந்தது . இந்த பதிவினால் பல விமர்சனங்களை சந்தித்தது இலங்கை அரசு . எனவே பிரடமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை .
இலங்கையின் பாதுகாப்புத் துறை தளத்தில் , "மோடிக்கு ஜெயலலிதாவின் காதல் கடிதங்கள் எவ்வளவு அர்த்தமானவை " என்ற பெயரில் ஒரு கீழ்த்தரமான கட்டுரை வெளியானது . மேலும் அந்த கட்டுரையில் , ஜெயலலிதா படமும் , ஒரு இருதய வடிவமும் அதற்குள் மோடியின் படமும் இருப்பது போல் சித்தரித்து வெளியிட்டனர் .
இந்த பதிவு வெளியானவுடன் பல அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர் . காங்கிரஸ் கட்சியும் கண்டனங்களை தெரிவித்தது .
இதனால் அந்த கட்டுரை அந்த தளத்தில் இருந்து நீக்கப்பட்டு , ஒரு மன்னிப்பு கட்டுரையை இடம் பெற செய்து இருக்கின்றனர் . மேலும் இலங்கை அரசு நிபந்தைனையற்ற மன்னிப்புக் கோரியது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.