பஞ்சாபில் ஜோகரிஹர் என்னும் கிராமத்தில் தனது தாயைக் கொன்று டிரங் பெட்டிக்குள் அடைத்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது . ஜோதி (17) என்பவர் தனது தாய் ராணியைக் (65) கொன்று டிரங் பெட்டிக்குள் அடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார் .
போலிஸ் கூறுகையில் ராணி ஒரு விதவை என்றும் , தனது கணவர் இறந்த பின் ஜோதியை அவர் தத்து எடுத்தார் . இருவருக்கும் அடிக்கடி சண்டை மற்றும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது . மேலும் ஜோதியின் நடவடிக்கை மீது அடிக்கடி சந்தேகம் கொண்டார் ராணி . ஜோதியின் நடத்தை சரி இல்லை என்று அடிக்கடி கண்டித்துள்ளார் .
இதனால் கோவமடைந்த ஜோதி , 27 ஆம் தேதி அன்று ராணியை ஒரு டிரங் பெட்டிக்குள் தள்ளி பூட்டி விட்டார் . இதனால் மூச்சு விட முடியாமல் உள்ளே இறந்து போனார் ராணி .
இதை விசாரணையின் போது ஜோதி போலிஸிடம் ஒப்புக் கொண்டார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.