நடிகர் அஜீத் "தல" அஜீத் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன, அவர் பேட்டிகள் கொடுத்தும் பல ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்றைக்கு வேண்டுமானால் அஜீத் நல்ல பிள்ளையாக அமைதியின் திரு உருவாக, ஜெண்டில்மேன் இமேஜ் உடன் திகழலாம், ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் தன் படத்தில் கூட நடிக்கும் ஸ்வாதி, ஹீரா போன்ற நாயகிகளை நிஜத்திலும் காதலித்து கொண்டிருந்தார், அதிலும் நடிகை ஹீரா உடனான காதல் பொதுமேடையில் ஹீராவுக்கு முத்தம் கொடுக்கும் அளவுக்கெல்லாம் சென்றது.
தற்போது விழாக்களுக்கு வராமல் தவிர்ப்பதும், பேட்டி என்றாலே கையெடுத்து கும்பிட்டு ஆளை விடுங்க என்று கூறும் அஜீத் பேட்டி கொடுப்பதை நிறுத்தியது ஏன் தெரியுமா? அஜீத் தனது பேட்டிகளில் ஓவராக பேசுவார், அதை தன்னம்பிக்கை என்று சிலரும் தலைக்கனம் என்றும் பலரும் கூறுவார்கள், இதனால் அஜீத்திற்கு வாரமலர் சினிமா கிசு கிசு பகுதியில் "வாய்க்கொழுப்பு" நடிகர் என்று கிண்டலடிக்கப்படுவார்.
விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவதாகவும், குமுதம் நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற போட்டியில் யார் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்க விழா நடைபெற உள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது, ஆனால் முதன் முதலில் அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான், அந்த நாற்காலி மீது எனக்கு ஆசை உண்டு, அதை நான் அடைய வேண்டும் என்பது எனது இலட்சியம் என்று வெளிப்படையாக கூறியது விஜய் அல்ல, அது அஜீத் தான்.

அடுத்த சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் என்று வெளிப்படையாக பேசிய அஜீத் தற்போது மெளனமாகிவிட விஜய்யோ அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை போட்டுக்கொள்வதற்கு விழா ஏற்பாடுகளுக்கு நாள் குறித்துக்கொண்டுள்ளார்.
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் சொல்லுங்க, அஜீத்தா, விஜய்யா? யாருக்கு கொடுக்கலாம்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.