இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்நிலையில் , காணாமல் போன இஸ்ரேலின் ராணுவ வீரரை ஹமாஸ் அமைப்பினர் கடத்தி விட்டது என சந்தேகப்பட்டு மீண்டும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம் .
ஹடார் கொல்டின் , 23 என்னும் ராணுவ வீரர் ராணுவ சுரங்கப்பாதை ஒன்றை அழிக்க முயன்ற போது , ஹமாஸ் அமைப்புடன் மோதல் ஏற்பட்டது . இந்த மோதலில் கொல்டின் காணாமல் போனார் . இவர் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று இஸ்ரேல் கூறுகிறது .
எனவே அந்த வீரரை தேடும் பணியில் 12 க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதலை தொடர்ந்து உள்ளனர் .
அமெரிக்க அதிபர் ஓபாமாவும் அந்த வீரரை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார் . ஓபாமா கூறுகையில் , " இனிமேல் போர் நிறுத்தம் பற்றி பேசும் முன் , ஹமாஸ் அமைப்பினர் அந்த ராணுவ வீரரை விடுவித்து இருக்க வேண்டும் " என்றார் .
ஆனால் ஹமாஸ் அமைப்பினர் அந்த ராணுவ வீரர் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறியுள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.