சென்னையில் மிக சிறந்த சைவ உணவகம் எது என்றால் பலரின் பதில் சரவண பவனாக தான் இருக்கும். அப்படிப்பட்ட சரவண பவன் ஹோட்டலின் மீது சென்னையை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் செய்து உள்ளார். ஜானகிராமன் சென்னையில் ஒரு டிராவல்ஸ் அன்ட் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை சட்டப்படி அனுப்பி வருகிறார்.
சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவக்குமார், வெளிநாட்டில் உள்ள சரவண பவன் கிளைகளுக்கு ஆட்களை அனுப்ப விசா மற்றும் அரசாங்க அனுமதிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று ஜானகிராமனை அணுகினார். அவரும் கடந்த 4 வருடங்களாக ஆட்களை அனுப்பி வருகிறார்கள். ஆரம்பத்தில் இதற்கான தொகையை சரியாக கொடுத்து வந்தார்கள், பின்பு இழுத்தடிக்க தொடங்கி உள்ளார்கள். இதுவரை 19 மாதங்களுக்கு ஆட்கள் அனுப்பியதற்கான தொகை ரூ,3,73,500 தர வேண்டி உள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக சிவகுமாரிடம் கேட்ட போது அவர், இது ஒரு சுத்த பொய் என்றார். தங்கள் ஊழியர்கள் 12 பேரின் பாஸ்போட்டை அந்த நிறுவனம் முடக்கி வைத்துள்ளதாக கூறுகிறார். யார் சொல்வது உண்மை என கூடிய விரைவில் தெரிய வரும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.