இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளமான www.defence.lk என்ற இணையதளத்தில் இந்திய இலங்கை மீனவர் இடையேயான பிரச்னை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம் எழுதுவது தொடர்பாக மிகவும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றிருந்தது.
நமது பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதுவது காதல் கடிதங்கள் என அந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது , இதனால் அந்த கட்டுரை அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த கட்டுரை இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டு இருந்தது என அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இந்த விவகாரத்திற்காக அவர்கள் மோடியிடமும் ஜெயலலிதாவிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.
இதில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் , பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். திமுக சார்பில் பேசிய திருச்சி சிவா , இது போன்ற கட்டுரைகள் வெளியாவதை இலங்கை அரசு தடுக்க வேண்டும் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.