ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கவில்லை, ஆனால் மக்களின்
துயரம் அதிகரித்து விட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. தகவல்
தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் பரவலாம் என்ற அச்சம்
எழுந்துள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துவிட்டனர். பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாநிலத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும்
உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
இந்த தேசியப் பணியில், நீங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், "தி நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை தொடக்க
நிதியாக வழங்கி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி'யைத்
தொடங்கியுள்ளோம். இதில் கீழ்க்காணும் 3 வழிமுறைகளில் ஒன்றின் மூலம் உங்கள்
பங்களிப்பை வழங்கலாம்.
- 'THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND' என்ற பெயரில், நிதிக்கான காசோலைகளை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு பதிப்பு மைய அலுவலகத்தில் வழங்கலாம்.
- ரொக்கப் பணமாக வழங்க விரும்புவோர், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு அலுவலகத்தில் வழங்கி, அதற்கான ரசீதை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.
- ஆன்லைன் மூலம் நிதியளிக்க விரும்புபவர்கள், THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND' என்ற பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள நடப்புக் கணக்கு எண்.6260119197-இல் நேரடியாகச் செலுத்தலாம்.
வங்கிக்கான SWIFT-CODE: IDIBINBBPAD. / IFSC CODE: IDIB000P001. ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், அதுதொடர்பான விவரங்களை, kashmirrelieffund@newindianexpress.com-க்கு அனுப்பலாம்.
நிதியளித்த அனைவரது பெயர்களும், நாளேட்டில் வெளியிடப்படும். இந்த
நிவாரணத் தொகை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கான
பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ஒப்படைக்கப்படும்.
காஷ்மீர், துயரத்தில் வாடுகிறது. அதற்கு உதவ வேண்டியது நமது கடமை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.