தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வங்கி
எழுத்தர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி சனிக்கிழமை (செப்.20)
தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கு. கலைச்செல்வன் தெரிவித்திருப்பது. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 19
அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் பணியிடங்களுக்கான பொது தேர்வை
ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் நடத்துகிறது. பாரத ஸ்டேட் வங்கி தங்கள்
வங்கிகளில் காலியாக உள்ள அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிக்கையை
வெளியிட்டுள்ளது.
இந்த 2 தேர்வுகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பதால் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டித் தேர்வுகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன் தொடக்கி வைக்கிறார். இந்த வகுப்பு தேர்வு நாள் வரை அனைத்து விடுமுறை நாள்களிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து, இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் 04362 - 237037 என்ற தொலைபேசியில் வெள்ளிக்கிழமை
(19/09/2014) மாலைக்குள் தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.