வண்டலூர் உயிரியல் பூங்காவில் வியாழக்கிழமை முதல்
வெள்ளைக் காகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அறிஞர் அண்ணா உயிரியல்
பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உத்திரமேரூர் அருகில் மற்ற பறவைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய வெள்ளை காகம் அண்மையில் மீட்கப்பட்டது. பறக்க முடியாமல் இருந்த அந்த வெள்ளைக் காகம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விலங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டது. தற்போது வெள்ளைக் காகம் குணமடைந்து, நன்கு பறக்கும் நிலையில் உள்ளது. இதையடுத்து அதை பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்த பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதல் அபூர்வ வரவான வெள்ளைக் காகத்தை வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். வெள்ளை நிறத்தில் காகங்களைப் பார்ப்பது மிகவும் அரிதாகும். சில நேரங்களில் நிறமி குறைபாடுகள் காரணமாக கருப்பு நிற காகம் வெள்ளையாக மாறிவிடுகிறது. வழக்கத்துக்கு மாறாக காணப்படும் வெள்ளை நிறமே காகத்துக்கு உயிர் வாழ்வதற்கான போராட்டமாக மாறிவிடுகிறது.
வாழ்விடத்துக்கு தகுந்தவாறு நிறங்களை பெற்றுள்ள பறவைகள், மாறாக வெள்ளை நிறங்களை பெறும் பொழுது மற்ற உயிரினங்களின் பார்வைக்கு எளிதாக ஆளாகிவிடுகின்றன.
இதனால் சக பறவைகள், விலங்குகளின் தாக்குதலுக்கும், வேட்டைக்கும் இலக்காகி விடுகின்றன. எனவே வெள்ளை நிறத்தில் காணப்படும் உயிரினங்கள் இயற்கையான வாழ்விடங்களில் வசிப்பதற்கு தகுதியற்றதாகிவிடுகின்றன என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.