ஸ்காட்லாந்து 307 ஆண்டுகாலமாக பிரிட்டனுடன் இணைந்துள்ளது, இப்படி இணைந்து இருப்பது தொடர வேண்டுமா அல்லது ஸ்காட்லாந்து தனி நாடாக பிரியலாமா என்று வாக்குப்பதிவு நடந்தது, இந்த வாக்குப்பதிவை பல்வேறு நாடுகளில் சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களும், போராளி அமைப்புகளும் ஒரு பக்கம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர், மறுபக்கம் இதன் முடிவுகளை அரசுகளும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தன.
வாக்கு என்ணிக்கையில் பிரிட்டனுடன் இணைந்து இருப்பது என 54.2% வாக்குகளும் பிரிந்து தனி நாடாகலாம் என்று 45.7% வாக்களித்திருந்தனர், பிரிட்டனின் 3 பெரிய கட்சிகளும் கடைசி நேரத்தில் ஸ்காட்லாந்துக்கு அதிக அளவிலான உரிமைகளையும் அதிகாரங்களையும் வழங்குவதாக உறுதியளித்தன.இது தான் ஸ்காட்லாந்து தனியாக பிரியாமல் பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற தரப்பு வெற்றி பெற காரணம் என்கிறனர்?
ஸ்காட்லாந்தில் பிறந்து வேறு ஊர்களில் வசித்து வருபவர்களுக்கு இதில் வாக்களிக்க வாக்குரிமை மறுக்கப்பட்டதும், இங்கிலாந்திலும், அயர்லாந்திலும் பிறந்து ஸ்காட்லாந்தில் குடியேறியிருப்பவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதுமே ஸ்காட்லாந்து தனிநாடாகமல் போக முக்கிய காரணம். ஸ்காட்லாந்து 300 ஆண்டுகளாக தனது விடுதலைக்காக பல்வேறு காலங்களில் பல்வேறு முறைகளில் போராடி வந்தது, கத்தியின்றி ரத்தமின்றி விடுதலைக்காக கிடைத்த ஒரு வாய்ப்பு இப்படி குடியேறிய மக்களால் வீணாகியது, இந்த நிலை தமிழ்நாட்டுக்கு வர நீண்ட நாட்கள் ஆகாது!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.