சிறீலங்கா இராணுவ உலங்குவானூர்தியில் சொகுசாகச் சென்று இனப்படுபொலை சிங்கள
இராணுவத்துடன் கைகுலுக்க
இலங்கைக்குச் சென்ற லைக்கா அதிபர் சுபாஸ்கரன் தனியார் நிறுவனத்திடம்
வாடகைக்கு எடுத்துக்கொண்ட ஹெலிக்கொபடரில் பயணம் செய்தார் என்றும், அத்
தனியார் நிறுவனம் சிறீலங்கா அரசின் ஹெலிகொப்டர்களை வியாபார நோக்கில்
பயன்படுத்தி வருவதாகவும் அதனைச் சிலர் தவறாகப் பிரச்சரம் செய்வதாகவும்
கட்டுக்கதை ஒன்றை உலாவ விட்டிருக்கிறார்கள். இதற்கு கட்டாக்காலி இணையமும்
வக்காலத்து வாங்கியுள்ளது.
முதலில் சிறீலங்காவுக்குச் சென்ற லைக்கா உரிமையாளர் தனியார் நிறுவனத்தின்
ஹெலிகொப்டரில் சென்றார் என்பதை அவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றுப்
பருக்கைக்குள் மறைக்கப்பார்க்கின்றார். அவர்கள் சிறீலங்கா இராணுவத்தின்
ஹெலிகொப்டரில் இராணுவத்துடனேயே சென்றார்கள் என்பதற்கான புகைப்பட ஆதரங்கள்
மேலும் வெளியாகியுள்ளன. புதிய படத்தில் லைக்கா நிறுவனத்தின் இயக்குனர் சுபாஸ்
ஹெலிகொப்டரிலிருந்து இறங்கி நடந்து செல்வதையும், பின்னணியில் புலம்பெயர்
நாடுகளில் தென்னிந்திய சினிமாவை வைத்து பணம் சம்பாதிக்கும் ‘கத்தி’ இணைத்
தயாரிப்பாளர் ஐங்கரன் பிலிம்ஸ் கருணாகரமூர்த்தியையும், லைக்கா நிறுவனத்தின்
முக்கியஸ்தர் பிரேம் சிவச்சாமி சிறீலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரியால்
வரவேற்கப்படுவதையும் காணலாம்.
புலம்பெயர் நாடுகளில் தமிழர்களிடம் பெற்ற இலாபத்தை இலங்கையில் ராஜபக்சவைப்
புனிதப்படுத்த முதலிட்ட லைக்கா அதிபர் தனக்கும் ராஜபக்சவிற்கும்
தொடர்பில்லை என்று கூறுவது மக்களின் தலையில் மிளாகாய் அரைக்கும் முயற்சி.
லைக்கா தொடர்பான பல்வேறு செய்திகள் ஆதாரத்துடன் வந்தபின்னரும் அவற்றை
மறைப்பதற்கு பெரும்பாடுபடுகின்றன லைக்கா குழுமமும் அதன் அடிவருடி
ஊடகங்களும்.
இனப்படுகொலை நடத்திய சிறீலங்கா இராணுவத்தோடு கைகுலுக்கிய அதே முகங்கள்
தமிழ் நாட்டில் உலவுகின்றனர். ஐங்கரன் வீடியோ நிறுவனத்தின்
கருணாகரமூர்த்தியும், சுபாஸ்கரனும் அவர்களது இரத்தக்கறை படிந்த்த கரங்களோடு
தென்னிந்திய சினிமா வியாபாரத்திலும் நுழைந்துள்ளார்கள்.
இலங்கையில் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை ராஜபக்ச குடும்பத்தோடு இணைந்து
கொள்ளையடித்துவிட்டு சமூக சேவை செய்வதாக நாடகமாடுகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.