நீலகிரி ஆப்பிள் அறுவடை முடிவடைந்ததாலும்,
காஷ்மீரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆப்பிள் விளைச்சல்
பாதிக்கப்பட்டுள்ளதாலும் ஆப்பிள் விலை கடுமையாக உயரத் துவங்கியுள்ளது. நீலகிரிக்கு பெரும்பாலும் காஷ்மீரில் இருந்துதான் ஆப்பிள்கள்
விற்பனைக்கு வருகின்றன. இங்கு சிம்லா ஆப்பிள்களும் கணிசமான அளவு
விற்கப்படுவதுண்டு.
இந் நிலையில், குன்னூரில் உள்ள சிம்ஸ்பார்க் பழவியல் பண்ணையில் உள்ள மரங்களில் ஆப்பிள் அறுவடை முடிந்ததாலும், காஷ்மீரில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ள காரணமாகவும் சிம்லாவில் இருந்து வரும் ஆப்பிள்களை நம்பியே தற்போது பழ வியாபாரிகள் உள்ளனர். சில வாரங்களுக்கு முன் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.120 முதல் ரூ. 130 வரை விற்கப்பட்டது.
தற்போது கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. இன்னும் சில நாள்களில் ரூ.200 வரை விலை உயர வாய்ப்பு இருப்பதாக பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.