தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அதிமுக பெரும்பாண்மை ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் தேர்தலே நடக்காமல் எந்த எதிர்ப்புமின்றி வெற்றி பெற்றுள்ளார்கள், திமுக, தேர்தலை புறக்கணிக்க, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டாமல் இருந்த நிலையில் பாஜக மட்டும் பல இடங்களில் போட்டியிட்டது.
நெல்லை மேயர் வேட்பாளார் உட்பட பல பாஜக வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் வாங்கிக்கொண்டு அதிமுகவில் சேர்ந்தனர், இன்று வெளிவந்த தேர்தல் முடிவுகளில் ஒரு சில இடங்கள் தவிர அனைத்து இடங்களையும் அதிமுக வென்றது, இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது உள்ளாட்சி இடைத்தேர்தலை சந்தித்ததை நாங்கள் மகிழ்ச்சியாக நினைக்கிறோம். மிரட்டலுக்கு அஞ்சி சிலர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றிருக்கலாம். ஆனால், ஆளுங்கட்சியினரின் தாக்குதல், மிரட்டலுக்கு அஞ்சாமல் பலர் கடைசி வரை களத்தில் நின்றனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பல இடங்களில் பாஜக வினர் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இந்த தேர்தல் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிராக வளர்ந்து வரும் கட்சியாக பாஜ உருவாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் தனிப்பெரும் கட்சியாக பாஜ உருவெடுக்கும் என்றார்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.