அணுகுண்டு தாக்குதலுக்கு ஆளாகினால், கடல் பகுதியில்
இருந்து அணுகுண்டுகள் தாங்கிய சிறிய ரக ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல்
நடத்தும் வகையில் புதிய திட்டத்தை பாகிஸ்தான் உருவாக்கி வருவதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவின் "தி வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தி விவரம்: பாகிஸ்தானின் நிலப்பரப்பில் அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள ராணுவ
மையங்கள் அனைத்தும் அணுகுண்டு தாக்குதலுக்கு ஆளாகி முற்றிலும் அழிய
நேரிட்டாலும், அதற்கு பதிலடி தரும்வகையில் புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு
உருவாக்கியுள்ளது.
அந்தத் திட்டத்தின்படி, அந்நாட்டு போர்க்கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து அணுகுண்டுகளை ஏந்திச் சென்று குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக்கூடிய "க்ரூஸ்' ஏவுகணைகளைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அநேகமாக இந்தத் திட்டம் அடுத்த ஆண்டுக்குக்குள் தயாராகிவிடும் என்று இஸ்லாமாபாதில் உள்ள பாதுகாப்பு உயர்கல்வித் துறை நிறுவன முன்னாள் இயக்குநரும், அணுசக்தி விஞ்ஞானியுமான ஷிரீன் எம்.மாஸாரி கூறியுள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.