கோயம்புத்தூர் சரவணம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் கீர்த்தனா (24) என்பவர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனது கணவர் செக்ஸ் டார்ச்சர் தருவதாக புகார்அளித்துள்ளார்.
கணவர் மீது அளித்துள்ள புகாரில் கீர்த்தனா கூறியுள்ளதாவது: பி.எஸ்சி படித்திருக்கும் எனக்கும், சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுரேஷ்குமார் மெக்கானிக்கல் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார், திருமணத்தின் போது என் பெற்றோர் 30 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவைகளை வரதட்சணையாக வழங்கினர்.
மேலும் திருமணத்திற்கு 4 லட்ச ரூபாய் வரை செலவு செய்தார்கள். எனது தந்தை சமீபத்தில் இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன் என் தந்தையின் சொத்துக்களை என் பெயருக்கு மாற்றி எழுதி தந்தார். என் தந்தை இறந்த பின் என் பெயரில் உள்ள சொத்துக்களை கணவர் பெயருக்கு மாற்றி தரவேண்டும் என கணவர் கேட்டார். இதற்கு நான் சம்மதிக்காதலா கோபமடைந்த சுரேஷ்குமார், என் குடும்பத்தினரிடமிருந்து நகை, பணம் வாங்கி தருமாறு கொடுமை படுத்தினார், மேலும் விதவிதமாக என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார். அவரின் செக்ஸ் டார்ச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தற்காக என்னை அடித்து உதைத்தார்.
என் குடும்பத்தினர் சத்திமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். என் கணவர் மீது போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் பிரியா மாலினி விசாரணை நடத்தி, சுரேஷ்குமார் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், மற்றும் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.