இந்தியாவில் நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை 12 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை காலத்தில் தமிழகம் தவிர பிற
மாநிலங்களில் மழை பெய்யும். ஆனால், நிகழாண்டு வெப்பச்சலனம், பருவமழையின்
தாக்கம் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்திலும் மழை பெய்தது. கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் செப். 17-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி,
நாட்டில் 12 சதவீதம் குறைவாக மழை பெய்தது. இந்த காலகட்டத்தில் நாட்டில்
824.3 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 729.2 மி.மீ. மழை மட்டுமே
பெய்துள்ளது.
தென்னிந்திய தீபகற்பத்தில் 4 சதவீதம் குறைவான மழையும், மத்திய
இந்தியாவில் 6 சதவீத குறைவான மழையும் பெய்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் 20
சதவீதமும், வடகிழக்கு இந்தியாவில் 16 சதவீதமும் குறைவான மழை பெய்துள்ளது. கோவையில் கூடுதல்: நிகழாண்டு வெப்பச்சலனம், பருவமழையின் தாக்கம்
ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அதிகளவு மழை பெய்தது. ஜூன் 1-ஆம் தேதி
முதல் செப். 17-ஆம் தேதி வரை தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் வழக்கத்தை
விட 329 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. இந்தக் காலத்தில் கோவையில் 150.3
மி.மீ. மழை பெய்யும். ஆனால் 645.1 மி.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 32 சதவீதமும், நீலகிரியில் 25 சதவீதமும் கூடுதல்
மழை பெய்துள்ளது. தேனியில் 122 சதவீத கூடுதல் மழை பெய்துள்ளது. 14
மாவட்டங்களில் சராசரி மழையும், 14 மாவட்டங்களில் குறைவான மழையும்
பெய்துள்ளது. மொத்தமாக தமிழகத்தில் சராசரி மழை பெய்துள்ளது. முடியும் தருவாயில் பருவமழை காலம்: தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும்.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முடியும் தருவாயில் உள்ளது. ஓரிரு
நாள்களில் தென்மேற்கு பருவமழை நிறைவு பெறும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.தென்மேற்குப் பருவமழை காலம் முடிந்தவுடன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.